Bharathiyar Birthday Velebration
11ம் தேதி பன்முகக் கலைஞர் பாரதியின் பிறந்தநாள். பாரில் உள்ள அனைவரின் மனமென்னும் மண்ணில் புரட்சி என்னும் வித்தினை வித்திட்டு , அந்த விதைகள் முளைத்து, விதையின் வீரியம் விருட்சமாகி நம் ஆதித்யாவின் பாரம்பரிய பூங்காவில் மிளிர்கின்றது. சூரியத்துண்டுகள் இவர் கண்கள்; வீரத்தின் கூறுகள் இவர் மீசை; மொழியின் மகுடம் இவர் முண்டாசு; கோவத்தின் நிறம் இவர் திலகம்; பாரதியின் உருவப் படம் வரைந்து, அதனைச் சுற்றி எம் பள்ளியின் குட்டி பாரதிகள் .மக்கள் மனதில் வீரத்தினை வித்திட்டவர், இவர் தன் எழுதுகோலால் ஆங்கிலேயரின் செங்கோலை வீழ்த்தினார். காலத்தின் திறவுகோலை தன் எழுத்தில் வைத்து விட்டார் அத்தகைய உணர்ச்சிமிகு பொன்மொழிகளை இவர் பிறந்த தினம் 11 என்பதால் 11 மழலை பாரதிகள் , இவரின் பொன்மொழிகளை மொழிந்தனர் . தன் முண்டாசு மடிப்பினிலே, முத்தமிழ் முக்கனியாய் இனித்தவர்; அத்தகைய முத்தமிழால் அவர் எழுதிய கண்ணன் பாட்டில் இருந்து ஒரு குறு நாடகம் நடித்தும், பாரதியாரின் பிறந்த நாளைச் சிறப்பாக கொண்டாடியது எம் ஆதித்யாவின் பாரம்பரிய பூங்கா.
You may also like
Grand Tribute to Mahakavi Bharathiyar
Snack-Themed Stars Shine!

