Traditional Food Feast
பண்டைத் தமிழர்களின் உணவு முறை அவர்களின் வாழ்வியலோடு கலந்தது. விருந்தோம்பல் தமிழரின் அடையாளம். உணவே மருந்தாகவும் மருந்தே உணவாகவும் நம் தமிழர்கள் உணவு முறை அமைந்தது. கிடைத்ததை கிடைத்த நேரத்தில் சாப்பிடாமல் மருத்துவமும் அறிவியல் காரணங்களோடும் நம் உணவு முறை அமைந்தது. தலைவாழை இலையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து மருத்துவ குணம் மிகுந்த சீரகம், வெந்தயம் ,மிளகு, பூண்டு ,தனியா, மஞ்சள் போன்ற அனைத்து பொருட்களையும் நம் மண்ணில் விளைந்த இயற்கையான காய்கறிகளையும் சேர்த்து அறுசுவை உணவுடன் பருவ காலத்திற்கு ஏற்ற உணவுகளை உண்டனர் நம் தமிழர்கள். உண்ணல், பருகல், தின்னல், நக்கல் என்னும் நான்கு உணவு உண்ணும் முறைப்படி அமைந்த உணவுகளை நம் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியின் மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவினை தம் சக மாணவர்களுடன் பகிர்ந்து தம் பிஞ்சு கைகளால் உணவுகளை எடுத்து உண்டனர் .அதன் மூலம் அவர்கள் நம் பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தையும் விருந்தோம்பல் பண்பினையும் கற்றுத் தெரிந்து கொண்டனர்
You may also like

Celebrating Earth Day with Heart and Hope

Role Reversal, Real Fun
