ஆதித்யாவின் பாரம்பரிய பூங்காவில் 23.8.2025 அன்று நடைபெற்ற விநாயகர் அகவல் மற்றும் திருப்புகழ் போட்டியில் முதல் நிலையில் தேர்வாகிய மாணவர்களுக்கு இறுதிச்சுற்று 27 .9. 2025 அன்று நடைபெற்றது . நம்பள்ளி முதல்வர் அவர்கள் நடுவராக இருந்து நம் மாணவச் செல்வங்களின் தமிழ் புலமைக்கு ஏற்ப அவர்களை மதிப்பீடு செய்தார். மூன்று நிலைகளாக போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தங்களின் தமிழ் புலமையை மாணவர்கள் சிறப்புடன் வெளிப்படுத்தினர்.