அன்னையின் உருவே: எங்கள் அன்பும் நன்றியும் நிறைந்த வாழ்த்து Posted by Admin Date August 12, 2025 Comments 0 comment அன்னையின் உருவே! அன்பின் மொத்த வடிவே! உம் பள்ளியில் பணிபுரிய வந்த ஆசிரியர் எங்களை உங்கள் பிள்ளைகளாய் எண்ணிப் பார்த்தீர்கள் அம்மா! எங்கள் முகம் வாடினால் எங்கள் துயர் துடைக்க அன்பின் மொத்த வடிவாய் முற்படுவீர்! அம்மா பசிப்பிணி போக்கிய பாவையாய் உங்களிடம் பணி புரியும் எங்களுக்காக உணவு படைத்தீர்கள் நீங்கள்! கருணை உள்ளத்தோடு உங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இன்று வரை உணவு வழங்க ஏற்பாடு செய்தீர்கள் நீங்கள்! கண்டதில்லை உங்களை போல் ஒரு தாயை என்றும் நாங்கள் ! அன்பும் அரவணைப்பும் ஒரு சேர எங்களுக்கு எப்பொழுதும் கிடைக்க வழி செய்தீர்கள் அம்மா! உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் அம்மா! Share: Admin Previous post Budding Botanists Day August 12, 2025 You may also like Budding Botanists Day 8 August, 2025 Say No to Mobiles: A Skit with a Strong Message 2 August, 2025 Inspiring Minds: Value-Based Session by Dr. S.V. Srinivasa Vallabhan 30 July, 2025