பாரம்பரிய தைப்பொங்கல் கொண்டாட்டம்
இருளை விலக்கி, ஒளியைத் தரும் (இரவைப் பகலாக மாற்றும் )சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திங்களாம் பொங்கல் திருநாளை, நம் ஆதித்யாவின் பாரம்பரியப் பூங்காவில் கொண்டாடி மகிழ்ந்தோம். இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இறைவனைத் தொழுது, நிகழ்ச்சியைத் தொடங்கினோம். “தை பிறந்தால் வழி பிறக்கும் “என்பர் அவ்வாறு நல்வழி பிறக்க, அகத்தூய்மைக்குச் சிறந்த நாள் போகி; அகமாகிய உள்ளம், இல்லம் ஆகியவற்றின் குப்பைகளையும் ,தீய எண்ணங்களையும் அகற்றி நல்வழியைப் பின்பற்ற வேண்டும் என்று மழலையர் வகுப்பினர் தீமையை தீயிலிட்டு எரித்தனர். பொங்கல் என்றாலே புத்தரிசி, புதிதாக அறுவடை செய்த நெல், காய்கறிகள், புதுப்பானையில் பொங்கல் வைத்து நாம் இயற்கைக்குப் படைத்து நன்றி தெரிவிப்பது. அதனை நம் பள்ளியில் சிறப்பாக செய்தோம். உழவுக்கும் உழவருக்கும் உறுதுணையாகத் திகழும் காளையின் சிறப்பை விளக்கும் வகையில் மாட்டு வண்டி ஊர்வலமும் நடைபெற்றது. முளைப்பாரி, கும்மி, நடனம் ,பொங்கல் பாடல் ,நம் பாரம்பரிய விளையாட்டான உறியடி என தைப்பொங்கலை பாரம்பரிய முறையில், கொண்டாடினோம் அனைவருக்கும் எங்கள் ஆதித்யாவின் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்!
You may also like
INFINITO: A Celebration of Mathematics
Christmas Celebration – A Joyful Gathering

