Karmaveerar Kamarajar Day Celebrated with Joy at Aditya Vidyashram
தென்னாட்டு காந்தி, கருப்பு காந்தி, கர்மவீரர் ,ஏழைப் பங்காளன் ,மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தவர் என்ற பல்வேறு சிறப்புப் பெயர்களை கொண்ட காமராசரின் பிறந்த நாள் இன்று ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் மழலையில் பிரிவில் கொண்டாடப்பட்டது. கொடிதினும் கொடியதாம் இளமையில் பசிப்பிணி. அத்தகைய பசிப்பிணியைப் போக்கி மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த ஏழைப் பங்காளனாம் எம் தலைவர் காமராசரைப் போல் உடை அணிந்து பசியைப் போக்க உணவிட்டனர் எம் பள்ளி மழலைகள். கள்வரால், காலத்தால் என்றும் அழியாத செல்வமாம், அறியாமை என்னும் இருள் நீக்கி அறிவொளியை நம் நாட்டிற்குத் தந்த கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராசரைப் போல் எம் பள்ளி மழலை செல்வங்கள் வேடமிட்டு அவர் வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் பிஞ்சு மனதில் விதைக்கப்பட்டது. அந்த விதை விருட்சமாகி இவ்வுலகம் அகிம்சை என்னும் காந்திய வழியைப் பின்பற்றிச் செல்லும் என்பதை நம்புவோம். வாழ்க காமராசர் ! வளர்க அவர் புகழ் !
You may also like

Triumphant Feat at the Scientifica Competition 2025

Vinayagar Chaturthi Celebration
